இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டை இட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் ட்ரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
தாக்குதல் நடத்த சமயத்தில் நெதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை