அரநாயக்க திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதிய உணவாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 13 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சத்தான உணவை தயார் செய்து தருவதாகவும், அவ்வாறே இன்று கொண்டைக்கடலை சாப்பிட்டதாகவும், அதன் பிறகு 13 மாணவர்கள் வாந்தி எடுத்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.