மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியன்மாரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது.

458 பேர் காயம் அடைந்துள்ளனர். 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *