முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, லொஹான் ரத்வத்தவின் மனைவியைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்காக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *