
சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலனறுவை வரையிலான ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.