நாட்டில் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, எலபத, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட பிரதேசங்கள் எலிக்காய்ச்சல் அபாயம் உள்ள பிரதேசங்களாகும்.

எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் சிறுநீரகம், இதயம், மூளை போன்ற உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *