
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் இவ்வருடம் 36 ஆவது தேசிய எயிட்ஸ் தின நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.
மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அணிவகுப்பு, கோல்ஃப் மைதானம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டம், நாகர்ஷாலா சுற்றுவட்டம், வைத்தியசாலை சதுக்கம், கண் வைத்தியசாலை, தி செரம் பிளேஸ் ஆகிய இடங்களை கடந்து தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு அலுவலகத்தை சென்றடைந்தது.
இந்த நடைபவனியில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.