
அம்பாறை, பொத்துவில், பகுதியில் ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை பிடித்துச் சென்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில் பச்சரச்சேனையைச் சேர்ந்த ஏ அமீன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற்படையினரும் ஆரம்பித்திருந்ததுடன், கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.