கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,’Donald Trump presidential race 2024.’ என தேடினால் மோசமான விடயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் தகவல் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் பிரசார குழுவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது.
ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் பற்றி மட்டுமே காட்டப்படுகிறது.
இது சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன்.
இது நடக்காவிட்டால், நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன் என கேட்டுக் கொள்வேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.