
Motivirus Education & Training Center இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 2025 ஜனவரி 03ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் KF.பஸீஹா பர்வின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பங்களாதேஷ், மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள், பணிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள், என பல்வேறு உயிர்மட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்வின் போது உளவியல் கல்வி, வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, சிங்கள மொழி, வரைவியல் வடிவமைப்பு போன்ற 9 துறைகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளித்து கௌரவிக்கப்பட உள்ளனர்.
Motivirus Education & Training Center நிறுவனமானது 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின கீழ் பதிவு செய்யப்பட்டு நாடு பூராகவும் 3 கிளைகளைக் கொண்டஒரு ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனமாகும்.
இந்நிறுவனமானது இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணவு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு பல்வேறு கற்கைநெறிகளை நேரடியாகவும், தொலைதூர கற்கை மூலம் வெற்றிகரமான முறையில் நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் International American University, Rushford University, Pacific Link College, Trinity Western University, Girne American University, American College, Larnaca College போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சான்றிதழ் கற்கைநெறி முதல் கலைமானி கற்கைநெறி வரையிலான பல்வேறு துறை சார் கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது மேலும் Ofqual மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் அமைப்புகளான Othm, SQA, CPD, Athee மூலம் உயர்தரமான கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனமானது அர்ப்பணிப்பு உள்ளதும், தகைமையும் அனுபவமும் உள்ள சிறந்ததொரு விரிவுரையாளர் குழுவொன்றினை கொண்டுள்ளதுடன், சிறப்பான முகாமைத்துவக் கட்டமைப்பினையும் கொண்டிருப்பதனால் உள்நாட்டு மாணவர்களை மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்த்து அவர்களும் இக் கல்லூரியில் கல்வி கற்று இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்கு இலங்கை வருவது ஒரு சிறப்பம்சமாக காணப்படுகிறது.
Motivirus Education & Training Center காலத்துக்குத் தேவையான தொழிற்திறன்களை கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதற்கான பல்வேறு பாடநெறிகளையும் அறிமுகம் செய்ய உள்ளது.
மேலும் இந்த நிறுவனமானது கல்வித் துறையுடன் மட்டும் நின்று விடாது பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளிலும் ஈடுபட்டு சேவையாற்றி வருகின்றமை ஒரு சிறப்பம்சமாக குறிப்பிடத்தக்கது.