
உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சீகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டத்திற்காக 2.4 பில்லியன் ரூபா அல்லது 240 கோடி ரூபாவை வழங்குவதற்கு கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் மேற்பார்வையில் தொல்லியல் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன் இத்திட்டத்தில் வீதி அபிவிருத்தி, மாற்று வழிப்பாதை அமைத்தல், சிகிரி அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் பயணச்சீட்டு கவுன்டர் போன்றவற்றின் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.
இதற்காக, புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி, மத்திய கலாசார நிதியம் மற்றும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சில் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி தலைமையில், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் பிரதிநிதியாக, அதன் உள்ளூர் பணிப்பாளர் யுங்ஜின் கிம், பிரதி உள்ளூர் பணிப்பாளர் யோங் வான் கிம், அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம். அதபத்து மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.