
இரத்மலானை பிரதேசத்தில் காணி கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையின் பொது வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ஷ அங்கு தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் விசேடமாக எதனையும் கோரவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி. வி. திசானக இன்று (26) சிறைச்சாலைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் சிறைச்சாலையின் மேற்பார்வையில் யோஷித ராஜபக்ஷவை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.