
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வளர்ந்து வரும் வீரருக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷமர் ஜோசப் மற்றும் பாகிஸ்தான் அணியின் சயிம் அயூப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.