கம்புருபிட்டிய பிரதேசத்தில் இளம் ஆசிரியை ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் தாயும் சகோதரனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கத்தி மற்றும் இரும்பு பூந்தொட்டியால் சரமாரியாக தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுண்ட பெண்ணின் தாயாரால் பொலிஸாருக்கு எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் அவரது மகளை அவரே கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பல வருடங்களாக மகள் சொத்துக் கேட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் குற்றம் இடம்பெற்றிருக்கலாம் என அனுவ பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த (31ம் திகதி) 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பொலிஸார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சந்தேகத்தின் பேரில் தாயார் நாற்காலியில் மயங்கி கிடந்தார்.

76 வயதுடைய தாய், மருந்து வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *