
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் தீரமானித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் இந்த விசேட ரயில் சேவை 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளுக்கும் புத்தாண்டு நிறைவடைந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபை 9 ஆம் திகதி முதல் மேலதிகமாக 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.