முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த முன்மொழிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகளை அனுப்புவது தற்போதைய அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் பரிந்துரைத்துள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு திருத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது முன்மொழியப்பட்டது. பல்வேறு பாதுகாப்புக் கடமைகளுக்குத் தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை முன்மொழியப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலைப் பெற்றவுடன் இந்தப் பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். இதற்கமைய பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.