கொலையுடன் தொடர்புடைய நபர் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.

அதற்கமைய, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அன்று, வெல்லவ பொலிஸ் பிரிவின் வாசல அடுக்குமாடி குடியிருப்புகளின் மரலுவாவ பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் குறித்து சரியான தகவல்களை வழங்குபர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

அதற்கமைய, இந்தக் குற்றம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591244 அல்லது 071-8591882 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ள முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தினமன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்துள்ளார்.

மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் உயிரிழந்தார். 30 வயதுடைய பெண் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *