
பொலிவியாவில் நடந்த பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
யோகல்லாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில் இருந்து சென்று கொண்டிருந்த குறித்த பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கிட்டத்தட்ட 800 மீற்றர் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த பஸ்ஸானது அதிக திருப்பங்கள் உள்ளமலைப்பாதையில் பயணித்ததோடு பஸ்சின் வேகமும் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.