
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (19) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் பலத்த காயமடைந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த நபருக்கு சுமார் 65 வயது இருக்கலாம் எனவும், ஏனைய தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.