கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்றையதினம் (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக கூறப்படும் குறித்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் , சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சட்டத்தரணி வேடத்தில் சென்று பிரதான சந்தேக நபருக்கு உதவி செய்ததாக கூறப்படுகின்றது.

இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவின் 071 – 8591727 அல்லது 071 – 8591735 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடரப்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெயர் – பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி, வயது – 25 , தேசிய அடையாள அட்டை இலக்கம் – 995892480v , முகவரி – இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *