
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து இலங்கை வளிமண்டளவியல் திணைக்களம் 7 மாகாணங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (21.02.2025) பிற்பகல் 3.00 மணியளவில், இயற்கை ஆபத்துகள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிற்கும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிற்கு வெப்பக் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை காணப்படும்.
இது சாதாரண வெப்ப ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.