
கொட்டாஞ்சேனையில் சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர், இன்று (25) கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்கவும், அவரை தடுப்பு காவலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.