
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (12) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், மஹரகம புற்றுநோய் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிறுநீரக மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.