அநுராதபுரம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.கே. சம்பத் இந்திக குமார செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக, கடந்த பல ஆண்டுகளாக அந்த வைத்தியசாலையில் குறிப்பிடத்தக்க நிர்வாக குறைபாடுகளை அடையாளம் காண முடிந்தது.

வைத்தியசாலை ஊழியர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் இல்லாததாலும், வைத்தியசாலையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முறையாக நிர்வகிக்க தவறியதாலும் இந்த சூழ்நிலைகள் உருவானதாக தெரியவந்தது.

அதன்படி, இந்த விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *