
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவர் சேதமடைந்துள்ளதாகவும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.