
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல் தற்போதைய அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.வரலாற்றில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சில அரசியல் முடிவுகள் தவறாக இருந்தன.
ஒரு கட்சியாக, அந்த தவறான அரசியல் முடிவுகளின் விளைவுகளை நாம் இன்னும் அனுபவித்து வருகிறோம்.பொலிஸ்மா அதிபருடன் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதை அரசியலமைப்பு ரீதியாகக் கையாள முடியும்.
ஒருபுறம், அவர் மீது நீதிமன்ற வழக்கு உள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.