
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியில் [Election Dispute Resolution (EDR) Mobile இன்று (06) வரை 597 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய செயலியை அறிமுகம் செய்து 2 வாரங்களில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியது.
இதில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக EDR என்ற புதிய செயலி கடந்த மாதம் 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.