ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 54% வரிகளை விதித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க டொலரில் இருந்து 850 அமெரிக்க டொலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், 256GB ஐபோன் 16 Proவின் விலை 1,100 அமெரிக்க டொலரிலிருந்து 3,500 அமெரிக்க டொலராக உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *