
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானை இம்ரான், பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை கொலை செய்வதாக மிரட்டியதாக சமீபத்திய நாட்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.