
என் சமூகத்தை ரணில் விக்கிரமசிங்கவிடமோ,சஜித் பிரேமதாசவிடமோ ,மஹிந்த ராஜபக்சவிடமோ மேலும் அனுர குமார திஸாநாயக்க விடமோ சென்று ஈடு வைப்பதற்காக நான் அரசியல் களத்திற்கு வரவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் பேருவளை நகர சபை வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது சமூகம் கண்ட பிரபலம் என்று சொல்லப்படும் அரசியல் வாதிகள் போல், ராஜபக்ஷ என்றோ பிரேமதாஸ என்றோ தந்தையின் பெயரைக் கொண்டு இன்று ஆளும் இத்தேசியக் கட்சி சார்பாக நான் போட்டியிடவில்லை, எனது தந்தை சாதாரண தினக்கூலி வேலை செய்யக்கூடிய ஒருவரே ஆகும், மேலும் சட்டப் படிப்பை தொடரும் எனக்கும் அரசியல் செய்யவேண்டிய தேவையும் இல்லை ,சமூகத்தின் தேவை கருதியே மக்களுக்காக களமிறங்கி உள்ளேன் எனவும் தெரிவித்தார் .
மேலும், இன்றும் நாம் நகரசபை ஆட்சியமைத்த பின்னரும் கூட என்னையோ,எம் குழுவையோ சந்திக்க எவரும் முன்பதிவு செய்து நேரம் ஒதுக்கவெண்டிய தேவை இல்லை, பேருவளை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாம் இந்த மாற்றத்தை கொண்டுவருவோம்.
தினக்கூலி வேலை செய்யும் ஒரு பொது மகனும் , நாடாளும் ஜனாதிபதியும் சமமே ஆகும், என்ற சமத்துவமே எமது கொள்கையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.