
புத்தளம் பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 42 வயதானவர் உயிரிழந்ததுடன், 22 வயதான பெண்ணொருவர் காணாமல் போயுள்ளாரென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.