
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், வாக்குச்சாவடிகளுக்குள் நுழையும்போது புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.
கைத்தொலைபேசிகள் மற்றும் ஆயுதங்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.