களனி கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கவும் நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் சாரதிகளை திணைக்களம் கோருகிறது.