Category: LOCAL NEWS

பொதுத்தேர்தல் – தபால் மூல வாக்குகளுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான திகதிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில்…

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (10) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தில்…

பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தினார் அர்ச்சுனா!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார். மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

பொதுத் தேர்தலுக்காக இதுவரை 88 வேட்பு மனுக்கள் கைச்சாத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 88 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் – நால்வருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில்…

பிரதமர் ஹரிணி மற்றும் விஜித ஹேரத்தின் உருவப்படங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்படவில்லை – எந்தவொரு நபரும் தங்கள் படத்துடன் கூடிய முத்திரைகளை பெற முடியும் என்ற வகையிலேயே அவர்களுக்கு அவை வழங்கி வைக்கப்பட்டன ; தபால் திணைக்களம் தெளிவு படுத்தியது

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பாக நேற்றுமுதல் பகிரப்படும் பதிவுகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவு படுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட…

திடீரென தீ பற்றி எரிந்த பஸ்

இரத்தினபுரி-கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்தது. இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே தீக்கிரையாகியுள்ளது.

மட்டக்களப்பில் தனித்து போட்டியிட மு. கா. தீர்மானம்

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் “மரச்” சின்னத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சுதந்திரக் கட்சி சிலிண்டரில்

பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. இருந்தபோதிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுமென்று அந்தக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…