Month: October 2024

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ரயிலில் மோதி தாயும் மகனும் பலி

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு…

வெலிப்பன்ன இடமாறல் மீண்டும் திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் இன்று (12) காலை 7.00 மணிக்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிபன்ன இடமாறல் நேற்று காலை வெள்ளத்தில் மூழ்கியதால் அந்த இடம் மூடப்பட்டிருந்தது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில்…

வேட்பு மனுவில் பெயர் நீக்கம்; நீதிமன்றம் செல்வேன் என்கிறார் தமிதா

இரத்தினபுரி வேட்புமனு பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் போட்டியிட தன்னை…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம்

பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில் ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாகீர் மாக்கார், டலஸ் அலகப்பெரும, ஜி. எல். பீரிஸ், நிஷாம் காரியப்பர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுதாக்கல் நிறைவு!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இன்று (11) பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவிந்துள்ளது. வேட்புமனுக்களுக்கான எதிர்ப்பு பிரேரணைகள் முன்வைக்கும் நேரம் முடிந்ததும், தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள்…

மீனவர்களுக்கான அவசர அறிவிப்பு!

நாட்டில் நிலவும் காலநிலைக்கமைய புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையில் பயணிக்கும் சகல மீன்பிடி படகுகளும் மீள் அறிவித்தல் விடுக்கும் வரை கடலுக்கு செல்லக் கூடாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களம் அவசர அறிவிப்பொன்றை…

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி,…

தேசியப் பட்டியலில் நாமல் – வெளியானது பொதுஜன பெரமுனவின் பெயர் விபரம்

பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ குட்டியாராச்சி, சாகர காரியவசம், ஜெயந்த கெட்டகொட ஆகியோரின் பெயர்களும்…