Month: November 2024

சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை குறைப்பதாக கொள்கைப் பிரகடனத்தில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின்…

சீரற்ற காலநிலையால் 4 இலட்சம் பேர் பாதிப்பு – 12 பேர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை முழுவதும் மொத்தம் 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (28) மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உழவு இயந்திர விபத்து – மத்ரசா அதிபர் உள்ளிட்ட நால்வர் கைது

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை…

மட்டுப்படுத்தப்பட்ட இரவு நேர தபால் ரயில்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர தபால் ரயில் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஏனைய இரவு நேர நீண்ட தூர ரயில் சேவை திட்டமிட்டபடி இயங்கும்…

அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல்: இதுவரை 22 பேர் பலி – 1882 பேர் பாதிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து…

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் மூடிஸ்

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Ca” இலிருந்து அதிகரிக்க மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச பத்திர மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்தின் பத்திரப் பரிமாற்ற சலுகையைத் தொடர்ந்து, மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இலங்கைக்கான தர…

நுவரெலியாவில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் நுவரெலியா,கண்டி ,கொழும்பு வழியூடான போக்குவரத்து…

இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பிற்போடப்பட்டது

சீரற்ற காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல்…

மீன்பிடிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தந்தையும் மகனும் யான் ஓயா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாறக் (56 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. புடவைகட்டு –…

உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்பு

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன உழவு இயந்திரத்தின் சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சீரற்ற காலநிலை…