Month: November 2024

பொதுமக்களுக்காக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிப்பு

பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின்…

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: இலங்கை ஆதரவு

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது, “போர்நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள்…

பூண்டுலோயாவில் பாரிய மண்சரிவு ஏற்படும் அபாயம்

பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவிற்குற்பட்ட மாடிவீட்டு பகுதியில் மிக பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே குறித்த அபாயகரமான பகுதியில் சுமார் 10 குடும்பங்கள் தற்போது வசித்து வருவதாகவும் அவர்களை மிக விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு…

உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும்…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம் – இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு…

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

இரத்தினபுரியில் எலிக்காய்ச்சலால் அதிகளவான மரணங்கள் பதிவு

நாட்டில் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படையினர் பங்கேற்றுள்ளதுடன், வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது.…

சீரற்ற காலநிலை – மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலனறுவை வரையிலான ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.