Month: November 2024

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் நியமனம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தின் அடிப்படை படியாக, ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (01) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். டிஜிட்டல் பொருளாதாரத்தை…

போலி இலக்கத்தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தெல்தெனிய பகுதியில் யாரும் வசிக்காத வீடொன்றின் கெரேஜில்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம்…

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1136 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 820 முறைப்பாடுகளும் 21 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…

மூன்றாம் தவணை நிதி குறித்து கலந்துரையாட இலங்கை வருகிறது IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை நிதி மீளாய்வு பற்றி கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்…

ரணிலுக்கெதிராக முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான பிரஜைகளின் அமைப்பால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்…

பதுளையில் கோர விபத்து – 35 பேர் படுகாயம் – மூவர் பலி

பதுளை, துங்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் பஸ், தடம் புரண்டு விபத்துக்கு உள்ளகியதில் 35 பேர் படுகாயடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளதுடன், விபத்துக்குள்ளான பஸ் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்துக்குரியது என்றும் கூறப்படுகிறது.

அரசியல் அநாதை உதய கம்மன்பில – விஜித ஹேரத்

‘‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஓர் அரசியல் அநாதை. அரசியல் அடைக்கலம் கோருவதற்காகவே அரசாங்கத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கம்மன்பில போன்றவர்களுக்குப் பொய் கூறுவதே தொழில். எதிர்வரும் 14 நாட்களில் இந்தத் தொழிலும் இல்லாமல் போய்விடும்” என்று…

54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் கணவன் மனைவி தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த…

மகிந்தவின் பாதுகாப்பில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு என சட்டத்தரணி மனோஜ் கமகே கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(31.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு…