Month: November 2024

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியர்கள்

காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வைத்தியர்கள் கைவிட்டுள்ளனர். வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்போது கைவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட வைத்தியர் வேறு…

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு

சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள…

நட்சத்திர ஓட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

நட்சத்திர ஓட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் உபசரிப்புகளை வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கராபிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…

லொஹான் ரத்வத்த திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

வெளிநாட்டவர்கள் பலரை நாடு கடத்த தயாராகும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக விசா இன்றி தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளம் காணும் நபர்களை கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள நபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை…

தேங்காய் தட்டுப்பாடு தொடரும் – தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டில் தேங்காய் வீழ்ச்சியினால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தேங்காய் தட்டுப்பாடு தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேங்காய் உற்பத்தியில் குறைவு…

நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

இன்று தீர்மானம் எட்டப்படாவிட்டால் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமான தீர்வின்றி நிறைவடைந்ததாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

உணவு ஒவ்வாமை காரணமாக 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அரநாயக்க திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவாக வழங்கப்பட்ட கடலையை சாப்பிட்ட 13 மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்…

கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போருக்கு விசேட அறிவுறுத்தல்!

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், கொழும்பு – பதுளை வீதியில் பயணிப்போரும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய…