Month: November 2024

ருஹுனு பல்கலைக்கு புதிய உபவேந்தர் நியமிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24)…

மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் முடிந்த பிறகு முதல் முறையாக தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. வாக்குப்பதிவு குறித்து உள்ளூராட்சி அதிகாரிகள் முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும்…

வைத்தியர் அர்ச்சுனாவுடன் சபாநாயகர் கலந்துரையாட தீர்மானம்

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தின்…

“இது முடிவல்ல ஆரம்பமே” – ஜீவன் எம்.பி

ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா, நானுஓயா மற்றும் புஸ்ஸலாவ ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி…

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை -மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தற்போது நாட்டின் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல்…

வட்டவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பேருந்தும் வட்டவளை பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக வத்சலா பிரியதர்ஷனி நியமனம்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித மஹிபால பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வருடம் 3 இலட்சத்து 33 ஆயிரத்து 185 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், 2 இலட்சத்து 53…

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமத்திய மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு,…

குளவிக் கொட்டுக்கு இலக்கான எழுவர் வைத்தியசாலையில்

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (23) மாலை பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்…