Month: December 2024

கடலில் நீராடச் சென்ற தந்தை – மகன் சடலமாக மீட்பு

அம்பாறை (Ampara) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன் கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (26)…

நிறுவனக் கோட்பாட்டு மீறல்: போக்குவரத்துத்துறையில் நட்டங்களை வெளிப்படுத்திய கணக்காய்வாளர் நாயகம்

நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொடருந்து திணைக்களத்தினால், இந்த…

ஜனாதிபதி வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – ஹரின் வாழ்த்து

இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு கடந்த அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்றிகளைத் தெரிவித்தார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காணொளியில், 2024ஆம்…

பதுளைக்கு விசேட ரயில் சேவை

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று இரவு…

அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் தொகையை இன்று (27) முதல் உரிய வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக் கொள்ளமுடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகையான 1,314,007,750…

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

பெருந்தொகையான மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி பற்றிய தகவல்கள் கிடைக்காமை அவதானம் செலுத்த வேண்டிய பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார். பல்வேறு நிதி மோசடிகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனை…

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் கோர விபத்து

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்தவர் பேருந்து சில்லுகளுக்கிடையில் நசுங்கி உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று (26.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவம்மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின்…

பண மோசடிகள் அதிகரிப்பு

நத்தார் பண்டிகைக் காலம் மற்றும் புதுவருட பிறப்பை இலக்காகக் கொண்டு, திட்டமிட்ட குழுவினரால் மீண்டும் பண மோசடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் கணினி அவசர பதிலளிப்புப் பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த (CERT) நிறுவனம்…

எரிந்த வாகனத்திற்குள் நபரொருவரின் சடலம் மீட்பு

ஹபரணை பொலனறுவை பிரதான வீதியில் ஹத்தே கன்வானுக்கும் படுஓயாவுக்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்றிரவு (25) இரவு கெப் வாகனமொன்றில் எரிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த…