Month: January 2025

“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பில் ஜனவரி 21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம்

“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால், அதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஐ.தே.கவுடன் கைகோர்ப்பு

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே மக்களும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…

77ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானம்

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக…

வடமத்திய பரீட்சை வினாத்தாள்கள் கசிவு சம்பவம் – ஆசிரியர் பணி இடைநீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் 6ஆம் மற்றும் 7ஆம் தர பரீட்சையின் வினாக்கள் கசிந்தமைக்கு காரணமான ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்கள் வருமாறு,11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் : இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது – ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுவரை 747 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய…

ஜனாதிபதி 14 ஆம் திகதி சீனா பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி 14 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிய முடிகிறது. இந்த விஜயத்தில் இலங்கைக்கு சீனா…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் – தேர்தல் அலுவலகங்களுக்கு விசேட அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை விரைந்து முடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலம் முடிவடைந்த போதிலும், ஒரு வேட்பாளர்…

Update :- கல்கிசை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

கல்கிசை வட்டரப்பல வீதியில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் இன்று அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,…

அரிசி மாபியா அரசுக்கு எதிராக கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

“இறக்குமதி செய்யப்படும் அரிசி, கிலோ ஒன்றுக்காக அரசாங்கம் விதித்துள்ள 65 ரூபா வரியால் அதிக இலாபம் ஈட்டப்படுகிறது.இதுவொரு அரிசி மாபியாவாகும்.வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவே இதற்கு வழிசமைத்தவர்’’ என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர்உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…