Month: February 2025

திரிபோஷ திட்டத்துக்கு 5000 மில்லியன்

சுகாதாரத்திற்காக 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.மீண்டும் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தோட்ட வைத்தியசாலைகளுக்கு மனிதவளம் மற்றும் மருந்துகளை அரசாங்கம் வழங்குகிறது. கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதன்மை மருத்துவப் பிரிவுகள் நிறுவப்பட்டு…

விலை உயர்ந்த அரச வாகனங்கள் அடுத்த மாதம் ஏலத்தில் விடப்படும்

அனைத்து விலையுயர்ந்த அரசு சொகுசு வாகனங்களும் அடுத்த மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது வளங்களை திறம்பட பயன்படுத்த ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய்

சுற்றுலாத் துறைக்காக டிஜிட்டல் டிக்கெட் முறை ஆரம்பிக்கப்படும்.சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாய். தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலர்களாக உயர்த்த நடவடிக்கைஇவ்வாண்டு தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலர்களாக உயர்த்த நடவடிக்கைடிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த…

துறைமுக நெரிசலுக்கு நீண்ட கால தீர்வு

துறைமுக நெரிசலுக்கு நீண்டகால தீர்வு காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டில் ஒரு தேசிய தர மேலாண்மை அமைப்பு தேவை.எங்கள் இலக்கை அடைய இந்த ஆண்டு 750 மில்லியன் ரூபாயை ஒதுக்குகிறோம்.

அமைச்சரின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனம்! முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் (Nalinda Jayathissa) உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வர முன்பதாக அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு அரசாங்க வாகனங்கள் வழங்கப்படும் விடயம் குறித்து…

இலங்கையை வந்தடைந்த போர்க்கப்பல்!

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த போர்க்கப்பல் நேற்று (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர். கொழும்பு…

தொடருந்து சேவையில் ஏற்படவுள்ள புதிய விருத்தி

தொடருந்து தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தொடருந்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எல்ல பகுதிக்கு விஜயம் செய்த…

இன்று இடம்பெற்ற கோர விபத்து

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேனில்…

புதிய அரசின் வரவு செலவுத் திட்டம் இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்ட அறிக்கை இதுவாகும். வரவு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…