Month: March 2025

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…

தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பிற்கு…

இஷாரா குறித்து தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக…

காவல்துறைக்கு பெரும் சவால் : எங்கே மறைந்தார் தேசபந்து தென்னகோன்…!

நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டபோதிலும்,ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும், முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை(Deshabandu Tennakoon) காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன…

புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தப்படுகிறது – உதய கம்மன்பில

‘‘தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புலனாய்வுத்துறை தேசிய மக்கள் சக்திமயமாக்கப்பட்டுள்ளது. திசைகாட் டியின் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் கணவரை உயர் பதவிக்கு நியமிப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 13 உயரதிகாரிகள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர்…

மித்தெனிய துப்பாக்கிச்சூடு – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத குழுவினரால் கடந்த 18ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட…

குளியாப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் அனுமதியின்றி…

எரிப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு சி.ஐ.டி அழைப்பாணை

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தனாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழுவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு…

தொழிற்சங்க போராட்டத்தை அனுமதிக்க முடியாது – சுகாதார அமைச்சர்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வெடிப்புச்சம்பவம்: இளைஞர் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற்பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன்…