மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் – நால்வருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில்…

பிரதமர் ஹரிணி மற்றும் விஜித ஹேரத்தின் உருவப்படங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்படவில்லை – எந்தவொரு நபரும் தங்கள் படத்துடன் கூடிய முத்திரைகளை பெற முடியும் என்ற வகையிலேயே அவர்களுக்கு அவை வழங்கி வைக்கப்பட்டன ; தபால் திணைக்களம் தெளிவு படுத்தியது

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பாக நேற்றுமுதல் பகிரப்படும் பதிவுகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவு படுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட…

பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!!

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரினை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெல்லி அருண் ஜெட்லி…

திடீரென தீ பற்றி எரிந்த பஸ்

இரத்தினபுரி-கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்தது. இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே தீக்கிரையாகியுள்ளது.

மட்டக்களப்பில் தனித்து போட்டியிட மு. கா. தீர்மானம்

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் “மரச்” சின்னத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சுதந்திரக் கட்சி சிலிண்டரில்

பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. இருந்தபோதிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடுமென்று அந்தக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க…

பொதுத் தேர்தலை கண்காணிக்க 8 சர்வதேச நாடுகளின் கண்காணிப்பு குழு

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

நுவரெலிய தபால் நிலைய கட்டடம் குறித்து விசேட அறிவிப்பு

நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நுவரெலியா தபால் நிலைய சொத்துக்கள் தொடர்பில் முன்னர் எடுக்கப்பட்ட…

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திருப்பி கையளிக்குமாறு உத்தரவிட்ட 41 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில்…