முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் நாடகத்தால் ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையின் அனைத்து இரகசியங்களும் உடைந்துவிட்டதாகவும் இனிமேலும் அதில் மூடி மறைக்க எதுவும் இல்லை என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். “ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி காத்தோலிக்க ஆயர்கள் சபையின் தலைவர் ஏரல் அண்டனி பெரேராவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இரகசிய அறிக்கை என்று குறிப்பிட்டே இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்க வில்லை.
கம்மன்பிலவின் நாடகத்தால் அந்த இரகசியம் உடைந்து விட்டது. அதனால், அந்த அறிக்கையில் இரகசியம் எதுவும் இல்லை என்பதை நான் அறிவிக்கிறேன் “ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.