சீன மக்கள் குடியரசின் மானியமாக 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த துணித் தொகைக்குரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளை, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் (SLITA) மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கான சீன அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற முறையில் பிரதமர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *