
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக வழக்குத் தொடர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை, மார்ச் 28 ஆம் திகதி வரை செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது.
ஆனால் , உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடைவதால் அந்த நாளிலிருந்து மார்ச் 28 ஆம் திகதி வரை புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் பிரஜைகளுக்கான வாய்ப்பை பறிப்பது நியாயமற்றது என்று கூறி, இந்த வழக்கைத் தாக்கல் செய்து இடைக்காலத் தடை உத்தரவைப் பெறுவது குறித்து எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியின் இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.