எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நேற்று (8) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 4,872 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *