
விவசாயிகளுக்கான உர மானியத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடைத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச உர மானிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், சில விவசாயிகள் மானியத்தைப் பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 18) சுசந்த குமார நவரட்ண எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 155 விவசாயிகளிடம் இருந்து 29 லட்சத்து 34 ஆயிரத்து 310 ரூபாய் உர மானிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக ஒரு பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதி முறைகேடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் உறுதிப்படுத்தினார்